சிம்புவின் அடுத்த பட வில்லன் விஜய்யின் நண்பரா? பரபரப்பு தகவல்

சிம்புவின் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்க உள்ள ’மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு வரும் 19ஆம் தொடங்க உள்ள நிலையில் அவர் நடித்து முடித்துள்ள ’மஹா’ படத்தின் வில்லன் குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது

’மஹா’ படத்தில் வில்லனாக நடிப்பவர் பிரபல நடிகர் ஸ்ரீகாந்த். இவர் விஜய் நடித்த ‘நண்பன்’ படத்தில் விஜய்க்கு நண்பராக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று வெளியாகியுள்ள ‘மஹா’ போஸ்டரில் சிறையில் ஸ்ரீகாந்த் இருப்பது போன்றும் அவரை துப்பாக்கியால் காட்டி கருணாகரன் மற்றும் தம்பிராமையா மிரட்டி இருப்பது போன்றும் வெளியாகியுள்ள போஸ்டரில் இருந்து இவர் தான் இந்த படத்தின் வில்லன் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் அந்த போஸ்டரில் “எல்லோரும் ஹீரோக்களே… எல்லோரும் வில்லன்களே.. அது யார் கதை சொல்கிறார்கள் என்பதை பொறுத்தது. மஹா படத்தின் கதாபாத்திரம் ஒன்றை வெளியிடுகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது

Leave a Reply