shadow

சிபிஎஸ்இ பாடத்தில் பெண்களின் உடல் சைஸ் குறித்த பாடம். சமூக ஆர்வலர்கள் கண்டனம்

பெண்களின் உடல் அமைப்பு, சைஸ், அழகான பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த பாடங்களை 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கு இணைக்கப்பட்டுள்ளதால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. அழகான பெண்களின் உடலமைப்பு 36-24-36 என்ற விகித்ததில் இருக்கும் என்று பாடத்தில் குறிப்பிட்டுள்ளதால் சமூக ஆர்வலர்கள் கவலை அடைந்துள்ளனர்.

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் முனைவர் வி.கே.சர்மா எழுதிய ” உடல் நலம் மற்றும் உடற்கல்வி” என்ற புத்தகம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தைதான் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு படிக்கும் பல பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இந்த புத்தகத்தில் உடல்கூறும், விளையாட்டும் என்ற அத்தியாயத்தில் பெண்களின் உடல் வடிவமைப்பு பற்றி கூறும்போது ‘36-24-36‘ கொண்டவர்கள்தான் அழகிய உடல் வடிவம் கொண்டவர்கள் என்றும் V வடிவம் கொண்டவர்கள் அழகான ஆண்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பெண்கள் உடலமைப்பு பற்றி அந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ள வரிகள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இதனை பார்க்கும் நெட்டிசன்கள் கடுமையான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply