shadow

சின்னத்தம்பி யானைக்கு திடீர் மயக்கம்: வனத்துறையினர் பரபரப்பு

உடுமலை பகுதிக்குள் புகுந்த சின்னத்தம்பி யானைக்கு திடீரென மயக்கம் அடைந்ததால் வனத்துறையினர் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமராவதி சர்க்கரை ஆலை அருகே தற்போது சின்னத்தம்பி யானை தரையில் படுத்த நிலையில் மயக்கத்தில் உள்ளதாக ஒருசிலரும் சின்னத்தம்பி யானை உறக்கத்தில் இருப்பதாகவும் மற்ற சிலரும் கூறி வருவதால் குழப்பநிலையே அங்கு உள்ளது. மேலும் இன்னும் சற்று நேரத்தில் சின்னத்தம்பி யானை எழுந்துவிடும் என வனத்துறை தகவல் தெரிவித்துள்ளனர்.

கடந்த பல ஆண்டுகளுக்கும் மேலாக கோவை மாவட்டப் பகுதிகளில் சுற்றித்திரிந்த சின்னத்தம்பி யானை, அப்பகுதியில் உள்ள விளை நிலங்களை சேதப்படுவதாகக் கூறி இடமாற்றம் செய்ய வனத்துறையினர் முடிவெடுத்தனர் அதன்படி பொள்ளாச்சிக்கு அருகே உள்ள டாப்சிலிப் வனப்பகுதியில் கொண்டுபோய் சின்னத்தம்பி யானையை இறக்கிவிட்டனர். ஆனால் அங்கிருந்து பயணப்பட்டு மக்கள் வசிக்கும் அங்கலக்குறிச்சி என்ற கிராமத்துக்குள் சமீபத்தில் நுழைந்த சின்னத்தம்பியை மீண்டும் காட்டுக்குள் விரட்டியடித்தார்கள் இந்தநிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி வனப்பகுதியில் இருந்து தற்போது திருப்பூர் மாவட்டம் உடுமலை வனப்பகுதிக்குள் யானை சின்னத்தம்பி இடம்பெயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

 

Leave a Reply