shadow

சாம்சங் கேலக்ஸி நோட் 8: வெளியீட்டு தேதி மற்றும் சிறப்பம்சங்கள்

சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐ.எஃப்.ஏ. விழாவிற்கு முன் வெளியிடப்படும் என கூறப்பட்டது. இந்நிலையில் தென் கொரிய தளத்தில் இருந்து வரும் தகவல்கள் புதிய நோட் 8 ஸ்மார்ட்போன் ஆகஸ்டு 26-ந்தேதி நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

முன்னதாக வெளியான தகவல்களில் நோட் 8 ஸ்மார்ட்போன் ஆகஸ்டு மாதத்தில் வெளியிடப்படும் என கூறப்பட்டது. சாம்சங் நிறுவனம் நோட் 8 அறிமுக விழாவினை அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் நடத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இம்முறை வெளியாகியுள்ள தகவல்களில் புதிய நோட் 8 ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே கேலக்ஸி S8 மாடலை விட பெரியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சாம்சங்-இன் முந்தைய வெளியீடுகளான நோட் 7 மற்றும் கேலக்ஸி S8 மாடல்களை விட பெரிய டிஸ்ப்ளே மற்றும் அதிகளவு வளைந்த டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இதுதவிர கேலக்ஸி நோட் 8 இரண்டு மாடல்களில் வெளியிடப்படும் என்றும், முதல் மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் மற்றொரு மாடலில் எக்சைனோஸ் 9810 சிப்செட் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இரண்டு மாடல்களிலும் ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளம் வழங்கப்படலாம்.

சாம்சங் கேலக்ஸி நோட் 8 மட்டுமின்றி கடந்த ஆண்டு வெளியிட்டு பின் திரும்பப்பெறப்பட்ட நோட் 7 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட பதிப்பும் விரைவில் வெளியிடப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு சாம்சங் வெளியிட்ட கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போனில் 5.7 இன்ச், 1440×2560 பிக்சல் ரெசல்யூஷன் டிஸ்ப்ளே, 4 ஜிபி ரேம், எக்சைனோஸ் 8890 பிராசஸர், 12 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமரா, 64 ஜிபி இன்டெர்னல் மெமரி, 3500 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டிருந்தன. இத்துடன் ஃபாஸ்ட் சார்ஜிங், ஐரிஸ் ஸ்கேனர், கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட வசதிகளும் டஸ்ட், வாட்டர் ப்ரூஃப் வசதிகளும் வழங்கப்பட்டன.

Leave a Reply