shadow

சாம்சங் கேலக்ஸி நோட் 8 மாடல் ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

1சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 7 மாடல் அந்நிறுவனத்திற்கு மிகப்பெரிய பின்னடைவை கொடுத்த நிலையில் அதில் இருந்து சற்றும் பின் தங்காமல் அடுத்த மாடலான கேலக்ஸி நோட் 8 மாடலை விரைவில் அறிமுகப்படுத்த சாம்சங் நிறுவனம் தயாராகி வருகிறது.

பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த சாம்சங் கேலக்ஸி நோட் 7 மாடல் உலகின் பல இடங்களில் திடீர் திடீரென வெடித்ததால் பெரும் பிரச்சனைக்கு உள்ளாகி பல விமான நிறுவனங்கள் அந்த மாடல் போனுக்கு தடை விதிக்கும் அளவுக்கு நிலைமை ஏற்பட்டது.

எனவே வேறு வழியின்றி சாம்சங் கேலக்ஸி நோட் 7 மாடலை உலகம் முழுவதிலும் இருந்து திரும்ப பெற்றது சாம்சங் நிறுவனம். இதனால் கோடிக்கணக்கான ரூபாய் இந்நிறுவனத்திற்கு நஷ்டம் என்றாலும் வாடிக்கையாளர்களின் நம்பகத்தன்மையை காப்பாற்றி கொண்டது.

இந்நிலையில் மிக விரைவில் வெளியாகவுள்ள சாம்சங் கேலக்ஸி நோட் 8 மாடலில் என்னென்ன சிறப்பு அம்சங்கள் இருக்கும் என்பதை தற்போது பார்ப்போம்

டூயல் ரியர் கேமிரா:

சாம்சங் கேலக்ஸி நோட் 8 மாடல் ஸ்மார்ட்போனில் இரண்டு ரியர் கேமிரா இருக்கும் என்றும் இரண்டில் ஒன்று 16எம்பி என்ற அளவில் லைட் அப் என்று கூறப்படுவதாகவும், மற்றொன்று 8எம்பி அளவில் லைட் பிளஸ் என்று கூறப்படுவதாகவும் இரண்டுமே பிரைட் புகைப்படத்திற்கு உதவும் வகையில் அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஹோம் பட்டனை க்ளிக் செய்ய தேவையில்லை.

தற்போது வரும் பெரும்பாலான மாடல்களில் ஹோம் பட்டன் இருக்கும் நிலையில் சமீபத்தில் வெளியான ஆப்பிள் ஐபோன் மாடல் போலவே இந்த சாம்சங் கேலக்ஸி நோட் 8 மாடல் ஸ்மார்ட்போனில் ஹோம் பட்டனை க்ளிக் செய்யும் ஆப்சன் இல்லை. ஆப்பிள் ஐபோன் மாடலில் இந்த போன் அமைந்துள்ளதால் வாடிக்கையாளர்களை பெருமளவு கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெஷல் லெஸ் டிஸ்ப்ளே:( Bezel Less Display)

சாம்சங் கேலக்ஸி நோட் 8 மாடல் ஸ்மார்ட்போனில் பெஷல் லெஸ் டிஸ்ப்ளே அமைந்துள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. மிக மிக அரிதான மாடல்களில் மட்டுமே அமைந்துள்ள இந்த டிஸ்ப்ளே சாம்சங் மாடல்களில் முதன்முதலில் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டிஸ்ப்ளே இருப்பது உண்மையானால் ஹோம் கீயும் டிஸ்ப்ளேவுடன் இணைந்தே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லாமே இதுல புதுசுதான்:

ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த மாடல் மிக மிக புதிய வகையில் அடுத்த வருடம் வெளிவர உள்ள நிலையில் அதற்கு இணையாக சாம்சங் கேலக்ஸி நோட் 8 மாடல் ஸ்மார்ட்போனிலும் பல புதிய அம்சங்கள் நிறைந்துள்ளது.

குவால்கோம் ஸ்னாப்டிராகன் 830 SoC

சாம்சங் கேலக்ஸி நோட் 8 மாடல் ஸ்மார்ட்போனில் மாடலில் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 830 SoC பிராஸசர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பிராஸசர்தான் இந்த மாடலில் இருக்கும் என்பது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதால் இதில் பெரிய ஆச்சரியம் ஒன்றும் இல்லை. மேலும் இந்த மாடலில் 6ஜிபி ரேம் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பேனல் டிஸ்ப்ளே எந்த வகை தெரியுமா?

சாம்சங் கேலக்ஸி நோட் 8 மாடலில் முதலில் பிளாட் பேனல் டிஸ்ப்ளேதான் இருக்கும் என்று சாம்சங் ஊழியர் ஒருவர் பேட்டி அளித்திருந்தார். ஆனால் தற்போது வெளிவந்துள்ள புதிய தகவலின்படி இந்த மாடலில் பிளாட் பேனல் இல்லை என்றும் வளைந்த அதாவது கர்வுடு பேனல்தான் இருக்கும் என்றும் உறுதியாக நம்பப்படுகிறது.

4K டிஸ்ப்ளே

சாம்சங் கேலக்ஸி நோட் 8 மாடல் ஸ்மார்ட்போனில் கண்டிப்பாக 4K டிஸ்ப்ளேக்கள்தான் இருக்கும் என்பது உறுதியாகியுள்ளது. இந்த தகவலை mydrivers.com என்ற இணையதளமும் சமீபத்தில் உறுதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply