shadow

சாம்சங் கேலக்ஸி ஏ7 அறிமுகம்

சாம்சங் கேலக்ஸி `ஏ’ வரிசையில் மேம்படுத்தப்பட்ட இரு புதிய ஸ்மார்ட்போன்களை சாம்சங் இந்தியா நிறுவனம் நேற்று அறிமுகம் செய்துள்ளது. கேலக்ஸி ஏ7 மற்றும் கேலக்ஸி ஏ5 என்ற பெயரில் இந்த ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன.

கேலக்ஸி ஏ7 ஸ்மார்ட்போனில் 5.7 அங்குல தொடுதிரை வசதியும் கேலக்ஸி ஏ5 ஸ்மார்ட்போனில் 5.2 அங்குல தொடுதிரை வசதியும் உள்ளது. இந்த புதிய கேலக்ஸி `ஏ’ வரிசை ஸ்மார்ட்போனில் இரு சிம் கார்டுகள் பொருத்திக் கொள்ளமுடியும். மேலும் தண்ணீர் மாசுக்கள் உட்புகாத வகையில் இந்த ஸ்மார்ட்போன்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. சீக்கிரமே சார்ஜ் ஏறக்கூடிய வகையில் இந்த ஸ்மார்ட்போன் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த இரு ஸ்மார்ட்போன் களிலும் 1.9 ஜிகா ஹெர்ட்ஸ் ஆக்டாகோர் பிராசசர் உள்ளது. மேலும் 3ஜிபி ரேம் சேமிப்புத் திறன் மற்றும் 16 எம்பி மெகாபிக்ஸல் பின்பக்க கேமரா வசதி கொண் டிருக்கிறது. கேலக்ஸி ஏ7 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 33,490. கேலக்ஸி ஏ5 ஸ்மார்ட்போனின் விலை ரூ.28,990.

Leave a Reply