shadow

சாம்சங் கேலக்சி நோட் 7 ஸ்மார்ட் போன்களை பயன்படுத்த வேண்டாம்: அமெரிக்கா எச்சரிக்கை

samsung-galaxyபெரும் எதிர்பார்ப்புடன் சமீபத்தில் வெளிவந்த ’சாம்சங் கேலக்சி நோட் 7′ ஸ்மார்ட்போனை விமானத்தில் பயன்படுத்த ஆஸ்திரேலிய விமான நிறுவனங்கள் தடை விதித்துள்ள நிலையில் தற்போது அமெரிக்க நுகர்வோர் ஆணையம் இந்த போனை பயன்படுத்த வேண்டாம் என அமெரிக்க மக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தென்கொரிய நிறுவனமான சாம்சங் நிறுவனத்தின் புதிய வெளியீடான ’சாம்சங் கேலக்சி நோட் 7′ சார்ஜ் செய்யும்போது வெடித்து சிதறுவதாக உலகின் பல நாடுகளின் வாடிக்கையாளர்களிடம் இருந்து புகார்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில், பேட்டரி கோளாறால் திடீரென்று வெடித்து சிதறும் ’சாம்சங் கேலக்சி நோட் 7’ ஸ்மார்ட் போன்களை பயன்படுத்த வேண்டாம் என அமெரிக்க நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் அந்நாட்டு மக்களை எச்சரித்துள்ளது.

அமெரிக்காவில் பயன்பாட்டில் உள்ள கேலக்சி நோட் 7 ரக ஸ்மார்ட் போன்களை திரும்பப் பெற்றுகொள்வது தொடர்பாக முறைப்படியான அறிவிப்பை சாம்சங் நிறுவனம் வெளியிட வேண்டும் என்பது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், திரும்பப் பெறப்படும் போன்களுக்கு மாற்று ஏற்பாடு என்ன? என்பது தொடர்பாக அந்நிறுவனம் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும் எனவும் அமெரிக்க நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply