shadow

சஹாரா குழுமத்துக்கு சொந்தமான 3 ஹோட்டல்கள் 130 கோடி டாலருக்கு வாங்கப்படுகிறது

saharaசஹாரா குழுமத்துக்குச் சொந்த மான, வெளிநாடுகளில் உள்ள ஹோட்டல்களை 130 கோடி டாலருக்கு வாங்க தொழில் குழுமம் ஒன்று விருப்பம் தெரிவித்துள்ளது.

பணத்தை முதலீட்டாளர் களுக்கு திருப்பித்தர வேண்டிய சிக்கலில் தவிக்கும் சஹாரா குழுமம், தனது சொத்துகளை விற்க முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனத்துக்குச் சொந்தமாக வெளிநாடுகளில் உள்ள ஹோட் டல்களை விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அது எதிர்பார்த்த பலனை அளிக்க வில்லை.

இந்நிலையில் ஜெஸ்தேவ் சாகர் குழுமத்துக்குச் சொந்த மாக பிரிட்டனில் செயல்படும் மூன்று நிறுவனங்கள், சஹாரா குழுமத்துக்குச் சொந்தமான வெளிநாடுகளில் உள்ள ஹோட்டல் களை வாங்க முன்வந்துள்ளது. லண்டனில் உள்ள பிரபலமான ஹோட்டலான கிராஸ்வெனோர் ஹவுஸ் மற்றும் நியூயார்க்கில் உள்ள பார்க் பிளாஸா மற்றும் டிரீம் டவுன்டவுன் ஹோட்டல்களும் இதில் அடங்கும்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சாகர், இந்த ஹோட் டல்களில் நீண்டகால முதலீடாக இவற்றை மேற்கொள்ள தங்கள் குழும நிறுவனங்கள் முடிவு செய் திருப்பதாகக் கூறியுள்ளார்.

வெளிநாட்டில் உள்ள ஹோட்டலை வாங்க முன்வந்திருப்பது குறித்து சஹாரா குழுமம் எவ்வித கருத்தையும் தெரிவிக்க வில்லை. இந்நிலையில் இந்த மூன்று ஹோட்டல்களை விற்பது தொடர்பாக கத்தாரைத் தலை மையிடமாகக் கொண்டு செயல் படும் ஒரு தொழில் குழுமத்து டனும் பேச்சு நடத்தி வருவதாகத் தெரிகிறது.

சாகருக்குச் சொந்தமான 3 அசோசியேட்ஸ் நிறுவனம் 2014-ம் ஆண்டிலிருந்து இந்த மூன்று ஹோட்டல்களில் 32 கோடி பவுண்ட் வரை முதலீடு செய்திருப் பதாகத் தெரிகிறது. இந்நிறுவனத் துக்கு வர்த்தக அலுவலகங்கள் பிரிட்டன், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியாவில் உள்ளன.

இரண்டு ஆண்டுகளாக சிறையில் இருந்த சஹாரா குழுமத்தின் தலைவர் சுப்ரதா ராய், தற்போது ஜாமீனில் உள்ளார். வெளிநாட்டில் உள்ள ஹோட்டல்களை விற்பது மற்றும் பிற வழிகளில் கடன் திரட்டி செபி குறிப்பிட்டுள்ள தொகையை திருப்பி செலுத்துவதற்கான நட வடிக்கைகளில் இறங்கியுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் பாங்க் ஆப் சீனா வங்கி, கிராஸ்வெனோர் ஹோட்டலை விற்பதற்கு அனுமதி அளிக்கவில்லை. தங்க ளிடம் வாங்கிய கடனை திரும்ப செலுத்தாததால் ஹோட்டலை விற்க அனுமதிக்க முடியாது என சீன வங்கி குறிப்பிட்டுவிட்டது. இதனால் அப்போது ஹோட்டலை விற்பதில் சிரமம் ஏற்பட்டது.

பாங்க் ஆப் சீனாவில் இம்மூன்று ஹோட்டல்களையும் அடமானம் வைத்து சஹாரா பணம் வாங்கியிருந்தது. 2010-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரையான காலத்தில் இம்மூன்று ஹோட்டல்களும் 155 கோடி டாலர் மதிப்பில் வாங்கப்பட்டுள்ளன.

நியூயார்க்கில் உள்ள பார்க் பிளாஸா ஹோட்டல் 110 ஆண்டு பழமையானதாகும். இதன் உரிமை பலரது கை மாறியுள்ளது. இப்போது இந்த ஹோட்டலில் 75 சதவீத பங்குகள் சஹாரா குழுமம் வசம் உள்ளன. 25 சதவீத பங்கு கள் சவூதி அரேபிய இளவரசர் அல் வலீத்த பின் தலால் வசம் உள்ளது. சஹாரா குழுமம் ரூ. 24 ஆயிரம் கோடியை முதலீட்டா ளர்களுக்குத் திருப்பி அளிக்க வேண்டும் என செபி அறிவுறுத் தியுள்ளது. ஆனால் சஹாரா குழு மம் 95 சதவீத தொகையை முதலீட் டாளர்களுக்கு அளித்துவிட்டதாகக் கூறுகிறது. இருப்பினும் இந்த விவ காரம் இன்னமும் சட்ட ரீதியாக தீர்க்கப்படவில்லை.

Leave a Reply