shadow

சன் டிவியின் மெகா தொடரை இயக்கும் பிரபல இயக்குனர்!

அஜித் நடித்த முதல் படமான ‘அமராவதி’ உள்பட பல திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் செல்வா, தற்போது அரவிந்தசாமி, சிம்ரன் நடித்த ‘வணங்காமுடி’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்.

இந்த நிலையில் சன் டிவிக்காக ஒரு மெகா தொடரை இயக்குனர் செல்வா இயக்கவுள்ளார் இந்த தொடருக்கு ‘ரன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதே டைட்டிலில் கடந்த 2002 ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் மாதவன் , மீரா ஜாஸ்மின் , ரகுவரன் , விவேக் ஆகியோர் நடித்த படம் ரிலீஸ் ஆகி நல்ல வெற்றியை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் ஆகிய இரண்டு சேனல்களில் உள்ள நாடகங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் சன் டிவியின் நாடகங்களும் நல்ல வரவேற்பை பெறுவதற்காக இந்த தொடர் வெளிவருகிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply