shadow

சசிகுமாரின் அடுத்த பட ரிலீஸ் தேதி குறித்த தகவல்

நடிகர், இயக்குனர் சசிகுமாருக்கு கடந்த ஆண்டு சோதனையான ஆண்டாக இருந்த நிலையில் இந்த ஆண்டு அவர் நடித்து வெளிவரும் ‘நாடோடிகள்’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது

சசிகுமார் நடிப்பில் சமுத்திரக்கனி இயக்கி வந்த ‘நாடோடிகள் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிந்து இம்மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த படம் வரும் மார்ச் 1ஆம் தேதி வெளியாகவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

சசிகுமார், அஞ்சலி, அதுல்யா ரவி, பிக்பாஸ் புகழ் பரணி, நமோ நாராயணா, ஞானம்பந்தம், சூப்பர் சுப்பராயன், எம்.எஸ்.பாஸ்கர் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார். எண்டர்பிரைசஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் சசிகுமாருக்கு கைகொடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

 

Leave a Reply