சகா’ படத்தின் ரிலீஸ் எப்போது?
பசங்க , கோலி சோடா போன்ற படங்களில் நடித்த கிஷோர் மற்றும் ஸ்ரீராம் ஆகியோர் இணைந்து நடித்து வரும் படம் ‘சகா’. இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் முருகேஷ் இயக்கத்தில் வெளியாக உள்ள இந்த திரைப்படம் வரும் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் பாண்டி , ப்ரித்விராஜன், ரவி வெங்கடராமன் போன்ற பல பேர் நடிக்கின்றனர்.
செல்லி சினிமாஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஷபீர் இசையமைத்துள்ளார். நிறன் சந்தர் ஒளிப்பதிவும் ஹரிஹரன் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.