க்ரீன்லாந்தை விலை பேசுகிறாரா அமெரிக்க அதிபர்?

உலகின் மிகப்பெரிய தீவாக விளங்கும் கிரீன்லாந்தை விலைக்கு வாங்கலாமா என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது

இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகவும், கிரீன்லாந்து தீவை வாங்குவது அமெரிக்காவிற்கு பலன் தரும் என்று ஆலோசகர்கள் கூறியதாகவும், இதனையடுத்து டொனால்ட் ட்ரம்ப் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 1945ஆம் ஆண்டே க்ரீன்லாந்து விலை பேசப்பட்டதாகவும் அப்போதே அதன் விலை 100 மில்லியன் டாலர்கள் என கூறப்பட்டதால் அமெரிக்கா உள்பட எந்த நாடும் அந்நாட்டை வாங்க முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply