shadow

கோவை அரசு கலை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை ஆரம்பம்

கோவை அரசு கலை கல்லுாரியில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம் இன்று முதல் துவங்குகிறது.

கோவை அரசு கலை கல்லுாரியில் அரசு கலை கல்லுாரியில் மொத்தம் 21 பாடப்பிரிவுகள் உள்ளனர். 2017-2018ம் ஆண்டு கல்வியாண்டில் 21 பாடப்பிரிவுகளின் கீழ், 1,350 மாணவர்கள் கலந்தாய்வு மூலம் சேர்க்கப்படவுள்ளதாக அந்த கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த கல்லூரியில் உள்ள படிப்புகளில் சேர்வதற்கான, விண்ணப்ப படிவங்கள் இன்று முதல் வழங்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்ப கட்டணம், 50 ரூபாய். எஸ்.சி., எஸ்.டி., மாணவர்கள் சாதி சான்றிதழ் நகலை சமர்ப்பித்து, விண்ணப்பத்தை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

இதுகுறித்து கோவை அரசு கலை கல்லுாரி முதல்வர் ஜெயலட்சுமி கூறுகையில், ”இன்று முதல்,வேலைநாட்களில் விண்ணப்பங்களை காலை, 10:00 முதல் 3:00 மணி வரை மாணவர்கள் பெற்றுக்கொள்ளலாம். அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் சேர்த்து ஒரு விண்ணப்பம் சமர்ப்பித்தால் போதுமானது,”என்று கூறினார்

Leave a Reply