உலக சுகாதார மையம் அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரசுக்கு சரியான மருந்து ஒருபோதும் கிடைக்காமல் போக வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

மனித குலத்தையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவுக்கு தடுப்பூசி, கட்டுப்படுத்தும் மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் மருத்துவர்கள் தீவிர முயற்சியில் உள்ளனர்

இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் சமீபத்தில் பேட்டியளித்த போது கொரோனாவிற்கு சில மருந்துகள் மூன்றாம் கட்ட பரிசோதனைகள் இருந்தாலும் அவை துல்லியமான தீர்வுகளை தரக் கூடியதாக இல்லை

எனவே கொரோனா வைரசுக்கு சரியான மருந்து ஒருபோதும் கிடைக்காமல் போகலாம் அதனால் தனிமனித இடைவெளி மாஸ்க் அணிவது கைகளை அடிக்கடி கழுவுவது ஆகியவற்றை தொடர்ந்து மனித இனம் கடைபிடித்தே ஆக வேண்டிய நிலை உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply