முதல்வர் அறிவிப்பு

சென்னை மாம்பலத்தை சேர்ந்த காவல் நிலைய ஆய்வாளர் பால முரளி என்பவர் இன்று கொரோனாவால் உயிரிழந்தார் என்ற செய்தி காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கடந்த சில நாட்களுக்கு முன்னர் வரை கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த இன்ஸ்பெக்டர் பால முரளி அவர்கள் திடீரென கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு காவல்துறையினரின் உதவியுடன் உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி இன்று அவர் மரணமடைந்தார்

இதனையடுத்து அவரது குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பாலமுரளி குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசு பணி வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்

மறைந்த பாலமுரளி அவர்களுக்கு மனைவி மற்றும் எட்டாம் வகுப்பு படிக்கும் மகள் நான்காம் வகுப்பு படிக்கும் மகன் ஆகியோர் உள்ளனர். எனவே பாலமுரளியின் மனைவிக்கு அரசு வேலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறைந்த முரளியின் தந்தையும் இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply