shadow

குழந்தைகளைக் குதூகலப்படுத்தும் சோள கீர்

பெரும்பாலான வீடுகளில் குழந்தைகளின் விருப்பத்தைப் பொறுத்தே சமையல் அமையும். அவர்களுக்குப் பிடிக்காத காய்கறிகளைக்கூட அவர்களுக்குப் பிடித்த உணவோடு கலந்து செய்யும் வித்தையைப் பெற்றோர் பலர் தெரிந்துவைத்திருக்கிறார்கள். குழந்தைகள் தினமான நவம்பர் 14 அன்று குழந்தைகளை மகிழ்விக்காமல் இருக்க முடியுமா? குழந்தைகளுக்கு சத்தும் சுவையும் நிறைந்த உணவு வகைகளைப் பரிந்துரைக்கிறார் சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த மீனலோசனி பட்டாபிராமன். அவற்றில் தேர்ந்தெடுத்த உணவு வகைகள் சிலவற்றின் செய்முறையை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

இனிப்புச் சோள கீர்

உருளைக் கிழங்கை வேகவைத்துத் தோல் நீக்கி நறுக்கிக்கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் விட்டுச் சீரகம் போட்டுத் தாளியுங்கள். பிறகு நறுக்கி வைத்துள்ள உருளைக் கிழங்கு, உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள். தக்காளி, வெங்காயம், புதினா ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். மாதுளை முத்துக்களை உதிர்த்து தக்காளிக் கலவையுடன் கலந்துவையுங்கள். அதனுடன் தேன், எலுமிச்சைச் சாறு, கருப்பு உப்பு, மிளகுத் தூள் ஆகியவற்றைச் சேர்த்து ஒன்றாகக் கலக்கி அதோடு உருளைத் துண்டுகளைப் போட்டுக் கலந்து பரிமாறுங்கள்.

என்னென்ன தேவை?

உதிர்த்த இனிப்புச் சோளம் – 1கப்

பால் – 3 கப்

சர்க்கரை – 4 டேபிள் ஸ்பூன்

நெய் – 1 டேபிள் ஸ்பூன்

ஏலக்காய்ப் பொடி – அரை டீஸ்பூன்

பாதாம் துண்டுகள்,

உலர்ந்த திராட்சை – அலங்கரிக்க

குங்குமப் பூ – சிறிதளவு

எப்படிச் செய்வது?

சூடு மிதமாக உள்ள பாலை ஒரு கிண்ணத்தில் ஊற்றி அதில் குங்குமப் பூவைப் போட்டுவையுங்கள். நெய்யில் சோளத்தை வதக்கிக்கொள்ளுங்கள். இரண்டு டேபிள் ஸ்பூன் சோளத்தைத் தனியே வைத்துவிட்டு மீதியை அரைத்துக்கொள்ளுங்கள். பாலை நன்றாகக் காய்ச்சி, அரைத்து வைத்திருக்கும் சோள விழுதைச் சேர்த்து வேகவிடுங்கள். சோளம் நன்றாக வெந்ததும் சர்க்கரை, குங்குமப் பூ கலந்த பால் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி ஏலக்காய்ப் பொடி சேர்த்து இறக்கிவிடுங்கள். மேலே பாதாம், உலர்ந்த திராட்சை இரண்டையும் தூவி அலங்கரித்தால் சுவையான சோள கீர் தயார்.

Leave a Reply