shadow

குஜராத் தேர்தலில் வெல்வது யார்? சமீபத்திய அதிர்ச்சி கருத்துக்கணிப்பு

பிரதமர் நரேந்திரமோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் வரும் 9 மற்றும் 14ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பாஜகவின் வெற்றி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் திடீரென ஹர்திக் பட்டீல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு கொடுத்ததால் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த மாதம் வெளியான கருத்துக்கணிப்புகளுக்கும் தற்போதைய கருத்துக்கணிப்புகளுக்கு மிகுந்த வித்தியாசம் ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் வரை பாஜக கடந்த தேர்தல்களில் பெற்ற மாபெரும் வெற்றியை பெறாது என்றாலும் கண்டிப்பாக ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் என்றே கணிப்புகள் இருந்தன.

ஆனால் தற்போது வெளிவந்துள்ள கருத்துக்கணிப்பின்படி குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவும், காங்கிரஸும் சம பலத்துடன் இருப்பதாகவும், ஆட்சியைப் பிடிப்பதில் இருகட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த லேட்டஸ்ட் கருத்துக்கணிப்பு காங்கிரஸ் கட்சிக்கு ஊக்கத்தையும், பாஜகவினர்களுக்கு அதிர்ச்சியையும் அளித்துள்ளது.

Leave a Reply