shadow

கீரை சூப்-இல் இருக்கும் சத்துக்கள் என்னென்ன?

தேவையான பொருட்கள் :

வெங்காயம் – 1,
ஏதேனும் ஒரு கீரை – 1 1/2 கப்,
பூண்டு – 1 பல்,
இஞ்சி – 1/2 துண்டு,
கொழுப்புச்சத்து நீக்கப்பட்ட பால் – 1 1/2 கப்,
சோள மாவு – 1 1/2 ஸ்பூன்,
பிரிஞ்சி இலை – 1 உப்பு,
[பாட்டி மசாலா] மிளகுத்தூள் – தேவைக்கேற்ப

செய்முறை :

கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

குக்கரில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கீரையை போடவும்.

அடுத்து அதனுடன் இஞ்சியையும் பூண்டையும் ஒரு. துணியில் மூட்டையாக கட்டி கீரையுடன் சேர்க்கவும், பிரிஞ்சி இலையை சேர்க்கவும்.

சிறிது தண்ணீர் சேர்த்து ஒரு விசில் வரும் வரை வேக விடவும்.

ஆறிய பின் இஞ்சி பூண்டு முடிந்து வைத்த மூட்டையையும், பிரிஞ்சி இலையையும் கசக்கி பிழியவும். பிழிந்த பின் இஞ்சி, பூண்டு, பிரிஞ்சி இலையை எடுத்து விடவும்.

கீரையுடன் இருக்கும் தண்ணீரை வடித்துவிட்டு கீரையை அரைக்கவும் .

அடுத்து அதில் வடித்த கீரை தண்ணீரை சேர்க்கவும். தேவைப்பட்டால் மேலும் தண்ணீர் சேர்க்கவும்.

அடுத்து அதில் சோள மாவை, குளிர்ந்தபாலில் சேர்த்து கரைத்து சூப்பில் சேர்க்கவும். மீதிப்பாலை சேர்த்து மெதுவாக கலந்து விடவும்.

Leave a Reply