ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2ஆம் தேதி கிராமசபை கூட்டம் தமிழகத்தில் நடைபெற்று வரும் நிலையில் இன்று கிராமசபை கூட்டம் கோவிட் காரணமாக ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது

ஆனால் இன்று திட்டமிட்டப்படி திமுக ஊராட்சி மன்ற தலைவர்கள் மக்களை சந்திப்பார்கள் என்றும், வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஊராட்சித் தலைவர்கள் திரண்டு நிற்பதால் தமிழக அரசுக்கு அச்சம் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதேபோல் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இதுகுறித்து கூறியபோது, ‘கிராம சபைக் கூட்டங்களை ரத்து செய்ய வைத்த நிஜக் காரணம் என்ன? கொரோனா கால செலவு கணக்கு பற்றி மக்கள் கேள்விகள் கேட்பார்கள் என்ற பயமா? அல்லது மக்கள் நீதி மய்யம் கொண்டுவிடும் என்ற நடுக்கமா? சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்று விடுமா? நாளை எமதே! என்று கூறியுள்ளார்.

Leave a Reply