shadow

Shazia-Ilmi-kiran-bedi-ieLஇந்தியாவின் அடுத்த ஜனாதிபதியாக நடிகை காத்ரீனா கைப்பை ஆக்கவேண்டும் என்ற சர்ச்சைக்குரிய கருத்தை சில மாதங்களுக்கு முன் தெரிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய முன்னாள் பிரஸ் கவுன்சில் தலைவரும் நீதிபதியுமான மார்கண்டேய கட்ஜு, தற்போது பாரதிய ஜனதா கட்சியில் உள்ள ஷாஜியா இல்மி மிக அழகானவர், கிரண்பேடிக்கு பதிலாக அவரை முதல்வர் வேட்பாளராக நிறுத்தியிருந்தால் பாஜக எளிதில் ஆட்சியை பிடித்திருக்கும் என மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று முன்னாள் பிரஸ் கவுன்சில் தலைவரும் நீதிபதியுமான மார்கண்டேய கட்ஜு தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்தபோது, ‘கிரண் பேடியைவிட ஷாஜியா இல்மி மிக அழகானவர். டெல்லியின் பா.ஜ.க. முதல்வர் வேட்பாளாராக அவரை நிறுத்தியிருந்தால், அக்கட்சி நிச்சயமாக டெல்லி தேர்தலில் வெற்றி பெறும்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும், கிரோட்டரியா அதிபர் கிராபர்-கிடாரோவிக்கை எடுத்துகாட்டாக கூறி மற்றொரு பதிவிட்டுள்ள கட்ஜு, ”கிரோட்டரியா போன்ற நாடுகளில் அழகான முகங்களுக்குதான் மக்கள் வாக்களிக்கின்றனர். என்னை போன்ற வாக்களிக்காத நபர்கள் கூட ஷாஜியா இல்மிக்கு வாக்களிப்பார்கள்” என்று கூறியுள்ளார்.

மார்க்கண்டேய கட்ஜூவின் கருத்துக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply