shadow

கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் வழக்கு: 8 வங்கிகளின் முன்னாள் தலைவர்களுக்கு சம்மன்- எஸ்ஐஎப்ஓ நடவடிக்கை

kingfisherதொழிலதிபர் விஜய் மல்லையா வுக்குச் சொந்தமான கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு கடன் வழங்கிய 8 வங்கிகளின் முன்னாள் தலைவர்களுக்கு சம்மன் அனுப்பப் பட்டுள்ளது. நிறுவனங்களில் நடை பெறும் தீவிர மோசடிகளை விசாரிக் கும் அமைப்பான (எஸ்ஐஎப்ஓ) இந்த சம்மனை அனுப்பியுள்ளது.

கிங்ஃபிஷர் நிறுவனத்துக்குக் கடன் வழங்கிய 14 பொதுத்துறை வங்கிகளில் 8 வங்கிகளின் முன்னாள் தலைவர்களுக்கு இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிறுவனத்துக்கு அளிக்கப் பட்ட கடன் தொகை திரும்பாதது தொடர்பான விசாரணையை எஸ்ஐஎப்ஓ மேற்கொண்டுள்ளது. விசாரணையின் ஒரு அங்கமாக கடன் அளித்த வங்கிகளின் தலை வர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டு சம்மன் அனுப்பப் பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே 3 வங்கிகளின் முன்னாள் தலைவர்களிடம் விசா ரணை நடத்தப்பட்டு அவர்களது கருத்துகள் பதிவு செய்யப்பட்டு விட்டதாக தகவல்கள் தெரிவிக் கின்றன. கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் சிறப்பாக செயல்படாத நிலையில் அந்நிறுவனத்துக்கு கடன் அளித்ததன் பின்னணி என்ன? என்று இவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டதாகத் தெரிகிறது.

கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறு வனத்துக்கு கடன் வழங்கியபோது வங்கிகளின் தலைவர்களாயிருந் தவர்களிடம் விசாரணை நடத்து வது மிகவும் அவசியம் என எஸ்ஐஎப்ஓ கருதுகிறது. இந்நிறு வனத்துக்கு கடன் வழங்குவதில் உரிய வழிமுறைகள் பின்பற்றப் பட்டுள்ளனவா அல்லது விதிமுறை களை மீறி கடன் வழங்கப்பட்டுள் ளதா என்பதை அறிய இத்தகைய விசாரணை நடத்தப்படுகிறது.

கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறு வனத்துக்கு பெருமளவிலான கடன் தொகை 2007-2010-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில அளிக் கப்பட்டுள்ளது. 2008-ம் ஆண்டு இறுதியில் இந்நிறுவனம் வங்கி களுக்கு அளிக்கவேண்டிய கடன் தொகை ரூ. 934 கோடியாக இருந் துள்ளது. ஓராண்டில் இது ரூ. 5,665 கோடியாக உயர்ந்துள்ளது. 2007-08ம் நிதி ஆண்டில் இந்நிறு வனத்தின் நஷ்டம் ரூ. 188 கோடி. இது அடுத்த நிதி ஆண்டில் (2008-09) ரூ. 1,608 கோடியாக உயர்ந்துள்ளது. 2009-10-ம் நிதி ஆண்டில் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் கடன் ரூ. 7,000 கோடியாக உயர்ந்துள்ளது. 2012-ம் ஆண்டில் இந்நிறுவன விமா னங்கள் தரையிறக்கப்பட்டன. தற் போது கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் 17 வங்கிகளுக்கு அளிக்க வேண்டிய கடன் தொகை ரூ. 9 ஆயிரம் கோடியாகும்.

வங்கியின் முன்னாள் தலைவர் களிடம் எஸ்ஐஎப்ஓ விசாரணை நடத்துவது இது முதல் முறை யல்ல. இதற்கு முன்பு கடந்த ஏப்ரல் மாதம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பஞ்சாப் நேஷனல் வங்கியின் இயக்குநர் குழு உறுப்பினர்களிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. அப்போது வின்சம் டயமண்ட் அண்ட் ஜூவல்லரி நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்களுக்கு ரூ. 6,800 கோடி கடன் வழங்கியது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.

கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறு வனத்தைப் பொறுத்தமட்டில் இந் நிறுவனத்தின் மிகைப்படுத்தப்பட்ட பிராண்ட் குறித்தும் ரூ. 4 ஆயிரம் கோடி என எவ்விதம் மதிப்பிடப் பட்டது என்றும் அதிகாரிகளிடம் எஸ்ஐஎப்ஓ கேள்வி எழுப்பியுள்ளது. பிராண்ட் மதிப்பை மதிப்பீடு செய்த ஆலோசனை நிறுவனத்திடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து மார்ச் 2-ம் தேதி விஜய் மல்லையா செல்வதற்கு முன்பாக இரண்டு முறை அவரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்கது.

Leave a Reply