காலையில் உயர்ந்த தங்கம் விலை மாலையில் குறைந்தது!

சென்னையில் இன்று காலையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு 26 ஆயிரம் ரூபாயை கடந்த நிலையில் இன்று மாலையில் விலை குறைந்து காணப்பட்டது

சென்னையில் நேற்று முன்தினம் ஆபரணத் தங்கம் சவரன் ஒன்று 25 ஆயிரத்து 176 ரூபாயாக இருந்த நிலையில் நேற்று 528 ரூபாய் உயர்ந்தது. இன்று காலை மேலும் 464 ரூபாய் உயர்ந்து சவரன் ஒன்று 26 ஆயிரத்து 168 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் மாலையில் தங்கம் விலை மீண்டும் குறைந்து சவரன் ஒன்று 25 ஆயிரத்து 896 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.

அதேபோல் நேற்று முன்தினம் வெள்ளி ஒரு கிலோ 40 ஆயிரத்து 300 ரூபாய்க்கு விற்ற நிலையில் இன்று காலை வார்த்தகத்தின் போது 1200 ரூபாய் அதிகரித்து 41 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனையானது. பிற்பகலுக்குப் பின் கிலோ வெள்ளி விலை 41 ஆயிரம் ரூபாயாகக் குறைந்தது.

Leave a Reply