காலாவதியான எல்.ஐ.சி பாலிசிதாரரா நீங்கள்? உங்களுக்கு இதோ ஒரு அரிய வாய்ப்பு!

கடந்த 2014 ஜனவரி 1-ம் தேதிக்குப் பிறகு எடுத்த பாலிசிக்கான பிரீமியம் தொகை தொடர்ந்து 2 ஆண்டுகள் செலுத்தப்படாமல் இருந்தால் அந்த பாலிசி காலாவதியான பாலிசியாக கருதப்படும் என எல்ஐசி நிறுவனம் என ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் தற்போது காலாவதியான பாலிசிதாரர்களுக்கு அதனை புதுப்பிக்க ஒரு வாய்ப்பை எல்.ஐ.சி வழங்கையுள்ளது

இதன்படி ;2014ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதிக்குப் பிறகு எடுக்கப்பட்ட பங்குச்சந்தையுடன் தொடர்பில்லாத பாலிசிகளை, முதல் செலுத்தப்படாத பிரீமியம் தேதியில் இருந்து 5 ஆண்டுகளுக்கு உள்ளும், பங்குச்சந்தையுடன் தொடர்புடைய பாலிசிகளை 3 ஆண்டுகளுக்குள்ளும் மீண்டும் புதுப்பித்துக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.

எனவே பாலிசிதாரர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தங்களது பாலிசிகளை புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது

Leave a Reply