shadow

கார்த்தியின் தேவ் படத்தில் இணையும் சூர்யா !

பல வெற்றி படங்களை தொடர்ந்து கொடுத்துக்கொண்டு வரும் நடிகர் கார்த்தி தற்போது தேவ் என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார்.. கார்த்தியும் சூர்யாவும் இணைந்து நடிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம் . இந்த வகையில் கடைக்குட்டி சிங்கம் படத்தில் ஒரு கட்சியில் மட்டும் நடித்து ரசிகர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்தார் சூர்யா.

இந்த நிலையில் கார்த்தி நடித்துள்ள ‘ தேவ் ‘ படத்தின் டிரைலர் இன்று மாலை 5.30 மணிக்கு சூர்யா வெளியிட்டார். இதன் மூலம் மீண்டும் சூர்யா-கார்த்தி இணைந்துள்ளனர். ‘தேவ்’ திரைப்படத்தின் டிரைலர் அனைத்து தரப்பினர்களையும் கவர்ந்துள்ளதால் சூர்யா-கார்த்தி சகோதரர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்..

மேலும் இந்த படத்தில் கார்த்தி , ராகுல் ப்ரீத் சிங்க் , பிரகாஷ் ராஜ் , ரம்யா கிருஷ்ணன் உள்பட பலர் நடித்துள்ளனர். ரவிசங்கர் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். வேல்ராஜ் படத்தின் ஒளிப்பதிவாளராகவும் ரூபன் படத்தின் தொகுப்பாளராகவும் உள்ளனர்.

Leave a Reply