கார்த்தியின் அடுத்த பட வில்லன் இவர்தான்

கார்த்தி நடிப்பில் ‘ரெமோ’ இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்ட நிலையில் இந்த படத்தின் வில்லனாக கருடாராம் என்பவர் நடிக்கவுள்ளார். இவர் யாஷ் நடித்த ‘கேஜிஎப் படத்தில் ஒரு சிறு கேரக்டரில் நடித்தவர் என்பதும் இந்த படத்தில் இவர் வில்லனாக புரமோஷன் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த படத்தில் கார்த்தி ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார். இவர் தமிழில் நடிக்கும் முதல் படம் இதுதான்.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ரொமான்ஸ், காமெடி, ஆக்சன் கலந்து உருவாகும் இந்த படத்தை ட்ரீம்வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது

Leave a Reply