கார்த்தியின் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல்
நடிகர் கார்த்தி தற்போது ரஜத் ரவிசங்கர் இயக்கி வரும் ‘தேவ்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வரும் ஜனவரியில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கார்த்தியின் அடுத்த படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடைபெற்றது.
கார்த்தியின் 18வது படமாக உருவாகும் இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே கடந்த 2017ஆம் ஆண்டு வெளிவந்த ‘மாநகரம்’. படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் திரைக்கதை வெகுவாக பாராட்டப்பட்டது.
இந்த படத்தில் ஹீரோயினும் இல்லை பாடல்க இல்லை என்பதும் இதுவொரு முழுக்க முழுக்க ஆக்சன் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்கவுள்ளார் என்பதும் .இந்த படத்தை எஸ்.ஆர்.பிரபுவின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.