shadow

காயத்ரி ரகுராம் கர்ப்பத்திற்கு காரணம் இதுதான்!…

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை காயத்ரி ரகுராம், சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் கர்ப்பிணி தோற்றத்தில் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை பதிவு செய்திருந்தார். இந்த புகைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இந்த நிலையில் காயத்ரி ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாகவும், அந்த படத்தில் அவர் கர்ப்பிணி வேடத்தில் தோன்றவிருப்பதாகவும், அதற்காக எடுக்கப்பட்ட புகைப்படம் தான் அந்த கர்ப்பிணி புகைப்படம் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

மேலும் இந்த படத்தின் நாயகனாக ஹரிஷ் உத்தமன் நடிக்கவுள்ளதாகவும், அவருக்கு ஜோடியாகத்தான் காயத்ரி நடிக்கவுள்ளதாகவும், இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

 

Leave a Reply