shadow

காமராஜர் பல்கலை நிர்வாகிகள் ஊடகத்தில் பேசக்கூடாது: திடீர் கட்டுப்பாட்டால் அதிர்ச்சி

நிர்மலாதேவி விவகாரம் குறித்து மதுரை காமராஜர் பல்கலைக்கழக நிர்வாகிகள் யாரும் ஊடகத்திற்கு பேட்டி அளிக்க கூடாது என பல்கலைக்கழகத்தின் பதிவாளர் சின்னையா திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டதால் பல்கலை நிர்வாகத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பதிவாளர் வெ. சின்னையா வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

`மதுரை காமராசர் பல்கலைக்கழகச் சட்டம் (Chapter VIII, Statue -29)-ன் படி தமிழக அரசு ஊழியர்கள் நன்னடத்தை விதிகள் மதுரை காமராசர் பல்கலைக்கழக ஊழியர்கள் அனைவருக்கும் பொருந்தும். பல்கலைக்கழக ஆசிரியர்கள், அலுவலர்கள், தொகுப்பூதியப் பணியாளர்கள், தற்காலிகப் பணியாளர்கள் அனைவரும் தாம் பணிபுரியும் பல்கலைக்கழகத்தின் நற்பெயருக்கும், புகழுக்கும் பங்கம் விளைவிக்கும் விதத்திலோ, அவதூறு பரப்பும் விதத்திலோ பல்கலைக்கழக வளாகத்திற்கு உள்ளேயோ அல்லது பல்கலைக்கழக வளாகத்திற்கு வெளியே நடக்கும் எந்த விதமான கூட்டங்களிலோ, போராட்டங்களிலோ கலந்து கொள்வதும், பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் பல்கலைக்கழகத்திற்கு எதிராக அவதூறு பிரசாரம் கூறுவதும் நன்னடத்தை விதிகளை மீறும் செயலாகும் என்று தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறு கலந்துகொண்டாலும், அவதூறாகப் பேசினாலும், மதுரை காமராசர் பல்கலைக்கழகச் சட்டம் (Chapter VIII, Statue -29) இன் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது’

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply