‘காப்பான்’ டிரைலரில் அதிரடி ஆக்சன் காட்சிகள்

சூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காப்பான்’ திரைப்படம் இம்மாதம் 20ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் விறுவிறுப்பாக ஜெட் வேகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் தயாராகிவிட்டதாக தகவல் வெளிவந்துள்ளது

‘காப்பான்’ படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இன்று வெளிவரும் என்றும், இவ்வார இறுதியில் டிரைலர் வெளியாகும் என்றும் தகவல். மேலும் இந்த டிரைலரை பார்த்த சிலர் அதிரடி ஆக்சன் காட்சி இருப்பதாக டுவீட் செய்துள்ளனர்.

மோகன்லால், ஆர்யா, சாயிஷா, உள்பட பல பிரபலங்கள் நடித்துள்ள இந்த படத்திற்கு தமிழகத்தில் மட்டுமின்றி தெலுங்கு மாநிலங்களிலும் கேரளாவிலும் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply