shadow

காணாமல் போன மீனவர்களை மீட்கக்கோரி நாகையில் கடலில் இறங்கி பெண்கள்

குமரி மாவட்ட மீனவர்கள் உள்பட தமிழக மீனவர்கள் ஆயிரக்கணக்கானோர் சமீபத்தில் ஏற்பட்ட ஓகி புயல் காரணமாக காணாமல் போயினர். அவர்கள் ஆளில்லா தீவுகளில் கரையொதுங்கி இருக்கலாம் என்றும் டீசல் இல்லாததால் மீண்டும் திரும்ப முடியாத நிலையில் இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

இந்த நிலையில் காணாமல் போன மீனவர்களை போர்க்கால அடிப்படையில் ராணுவ வீரர்கள் மற்றும் ராணுவக்கப்பல், ஹெலிகாப்டன் துணையுடன் துரிதமாக மீட்க வேண்டும் என்ற கோரிக்கையை மீனவர்கள் முன்வைத்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று காலை நாகை மீனவ குடும்பத்து பெண்கள் திடீரென கடலில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். மீனவ பெண்கள் தலையில் அடித்தவாறு கடலை நோக்கி செல்வதால் அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலில் இறங்கும் பெண்களுக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சம் நிலவுவதால் உடனடியாக இதுகுறித்து மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்க்கட்சியினர்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

Leave a Reply