காங்கிரஸ் மூத்த தலைவரின் மகன் பாஜகவில் இணைந்ததால் பரபரப்பு!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜனார்தன் திவேதி மகன் சமீர் திவேதி சற்றுமுன்னர் பாஜகவில் இணைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தனது சொந்த விருப்பத்தின் பேரில் சமீர் பாஜகவில் இணைந்ததாக ஜனார்தன் திவேதி விளக்கம் அளித்தாலும் ஒரு மூத்த தலைவரின் மகனேமாற்று கட்சியில் இணைந்துள்ளதால் காங்கிரஸ் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

கடந்த சில மாதங்களாக மாற்று கட்சிகளில் இருந்து பாஜகவில் இணைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவதால் பாஜகவின் பலம் கூடியுள்ளதாக அக்கட்சியின் தொண்டர்கள் தெரிவித்து வருகின்றனர்.

பாஜக, காங்கிரஸ், ஜனார்தன் திவேதி, சமீர் திவேதி,

Leave a Reply