காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் யார்? இன்று தேர்வு
டெல்லியில் இன்று காங்கிரஸ் எம்பிக்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்பிக்கள் அனைவரும் கலந்து கொள்ளவுள்ளனர். தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 8 எம்பிக்களும் ஏற்கனவே டெல்லி சென்றுவிட்டனர்.
இந்த நிலையில் இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் தேர்வு செய்யப்படலாம் என தகவல் வெளிவந்துள்ளது
மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி சமீபத்தில் ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.