கலிபோர்னியாவில் ‘தளபதி 63’ படக்குழு
தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கவுள்ள ‘தளபதி 63’ படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டது என்பது தெரிந்ததே. அந்த வகையில் தற்போது இயக்குனர், ஒளிப்பதிவாளர் மற்றும் தயாரிப்பாளர் ஆகிய மூவரும் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் லொகேஷன் பார்க்க சென்றுள்ளனர்.
இதன் மூலம் இந்த படத்தின் முக்கிய காட்சிகள் கலிபோர்னியாவில் படமாக்கப்படவுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த புகைப்படத்துடன் கூடிய டுவீட் ஒன்றை ஏஜிஎஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ அர்ச்சனா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் இன்று இயக்குனர் அட்லியின் மனைவி ப்ரியாவின் பிறந்த நாள் என்பதால் அர்ச்சனா அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
விஜய், நயன்தாரா, விவேக், யோகிபாபு, உள்பட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். இந்த படம் வரும் 2019ஆம் ஆண்டு தீபாவளி அன்று திரைக்கு வரவுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.