shadow

கர்நாடகத்தில் வாழும் மக்களுக்கு கன்னடம் கட்டாயம்: முதல்வர் சித்தராமையா

கர்நாடகத்தில் வாழும் வெளி மாநிலத்தவர்கள் கன்னடம் கற்பது கட்டாயம் என்று கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தில் பணிபுரியும் வெளிமாநிலத்தவர்களுக்கு கன்னடம் தெரிந்திருந்தால்தான் மக்களுக்கு சரியான முறையில் சேவை செய்ய முடியும் என்றும் இதனால் கர்நாடகத்தில் வாழும் வெளிமாநிலத்தவர்கள் கண்டிப்பாக கன்னட மொழியை கற்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

எந்த மொழிக்கும் நான் எதிரானவன் அல்ல என்றும், அதே சமயம் கர்நாடகத்தில் வாழ்ந்து கொண்டு கன்னடம் கற்காவிடில் அது மொழியை அவமதிப்பது போலாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஏற்கனவே கர்நாடக வங்கிகளில் பணிபுரியும் பிற மாநிலத்தவர்கள் கன்னடம் கண்டிப்பாக கற்க வேண்டும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது அனைவரும் கன்னடம் கற்க வேண்டும் என்பது சர்ச்சைக்குரியதாக பார்க்கப்படுகிறாது.

Leave a Reply