shadow

கருணாநிதி மீதான 13 அவதூறு வழக்குகள் என்ன ஆச்சு? நீதிமன்றம் உத்தரவு

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மீதான 13 அவதூறு வழக்குகளை ரத்து செய்யக் கோரி வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக அரசுக்கு எதிராகவும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்தும் முரசொலி நாளிதழின் கேள்வி பதில் பகுதியில் பல்வேறு கருத்துகளை கருணாநிதி வெளியிட்டதற்காக அவர் மீது 13 அவதூறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கருணாநிதி மறைந்ததால் இந்த வழக்குகளை தள்ளுபடி செய்யுமாறு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

நீதிபதி சுபாதேவி உத்தரவிட்டபடி, கருணாநிதியின் இறப்பு சான்றிதழை வழக்கறிஞர் குமரேசன் இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதுதொடர்பாக, தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை அக்டோபர் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Leave a Reply