shadow

கமல், ரஜினி இருவரும் சேர்ந்தாலும் 10% ஓட்டுகூட வாங்க முடியாது: சாருஹாசன்

ஒருபக்கம் கமல்ஹாசன் அரசியலுக்கு வந்துவிட்டேன் என்றும் வரும் பிறந்த நாளில் கட்சி ஆரம்பிக்க இருப்பதாகவும் கூறி வருகிறார். இன்னொரு பக்கம் ரஜினிகாந்த் விரைவில் தனிக்கட்சி தொடங்கவுள்ளதாகவும், போர் வரும்போது பார்த்து கொள்ளலாம் என்றும் கூறி வருகின்றார். ஒருசிலர் கமல், ரஜினி இருவரும் இணைந்து கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். இந்த நிலையில் கமல்ஹாசனின் சகோதரர் சாருஹாசன் கமல், ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து கூறியதாவது:

தமிழகத்தை பொறுத்தவரை திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகள் தான் மக்கள் மத்தியில் இடம் பிடித்துள்ளது. இதில், மூன்றாவது கட்சியாக ஒன்று உருவாகினால், அதற்கு எந்த பலனும், பயனும் இருக்காது. கமல் அரசியலுக்கு வந்தால் அவரால் ஜெயிக்க முடியாது.

யாராக இருந்தாலும் சரி நடிகன் என்ற தகுதிக்கு அப்பாற்பட்டு அரசியலுக்கு வருவதற்கு ஒரு பக்குவமும் உண்டு. அப்போ, ஜெயலலிதா முதல்வராக இருந்தாரே என்றெல்லாம் கேட்காதீர்கள். அவரும் ஒரு நடிகர் தானே என்று கேட்டால், அவர் நடிகை என்பதற்காக மட்டும் அரசியலுக்கு வரவில்லை. அதையும் தாண்டி அவருக்கென்று ஒரு அங்கீகாரம் இருந்தது. கமல் ஹாசன், ரஜினிகாந்த் இருவரும் இணைந்து கட்சி துவங்கினாலும் 10 சதவீத ஓட்டு கூட வாங்க முடியாது”

இவ்வாறு சாருஹாசன் கூறினார்.

Leave a Reply