shadow

கமல் கட்சியுடன் கூட்டணி சேரும் பாரிவேந்தர் கட்சி

இரு கழகங்களுடன் சேராமல் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ள கமல்ஹாசனின் கட்சி வேட்பாளர்கள் இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி, கமல் கட்சியுடன் கூட்டணி சேரும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

நேற்று சென்னை கிண்டியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்ட ஒன்றில் கமல்ஹாசனும், பாரிவேந்தரும் சுமார் அரை மணி நேரம் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடத்தியதாக இதில் கூட்டணி குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

பாரிவேந்தர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை அரசியல்வாதிகள் கூறியுள்ள நிலையில் ஊழல் இல்லாத கட்சியுடன் மட்டுமே கூட்டணி என்று கூறிய கமல் கூட்டணி வைக்க முடிவு செய்திருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது

Leave a Reply