கமல்ஹாசன் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ்: பரபரப்பில் இணையதளங்கள்

புதிய திரைப்படங்களுக்கு டீஸர், டிரைலர் ரிலீஸ் செய்வது பல ஆண்டுகளாக வாடிக்கையாக இருந்து வரும் நிலையில் கமல்ஹாசன் நடித்துள்ள பழைய திரைப்படம் ஒன்று சன்நெக்ஸ்ட் செயலியில் வெளியாக இருப்பதற்காக புதிய டிரைலர் ஒன்றை வெளியிட்டு இருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது

கமலஹாசன் நடிப்பில் சரண் இயக்கத்தில் உருவாகிய ’வசூல்ராஜா எம்பிபிஎஸ்’ என்ற திரைப்படம் சன்நெக்ஸ்ட் செயலியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. இதனை அடுத்து சன்நெக்ஸ்ட் இந்த படத்திற்காக ஒரு டிரெய்லரை தயார் செய்து அதனை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளது

இந்த டிரைலருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது கமலஹாசனின் காமெடி நடிப்பில் உருவான இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படம் என்பது அனைவரும் அறிந்ததே

Leave a Reply