shadow

கமல்ஹாசன் நிகழ்ச்சிகள் அனைத்தும் திடீர் ரத்து? காரணம் என்ன?

உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது எந்த படத்திலும் நடிக்கவில்லை என்றாலும் படுபிசியாக உள்ளார். இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிசியாக இருந்தவர் தற்போது அரசியல் ஆலோசனையில் அதைவிட இரண்டு மடங்கு பிசியாக உள்ளார்.

இந்த நிலையில் சில நாட்களுக்கு கமல் கலந்து கொள்ளவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து கமல் தரப்பில் விசாரித்தபோது, ‘கமல் நிகழ்ச்சிகள் அனைத்தையும் சில நாட்கள் ரத்து செய்தது உண்மைதான் என்றும், திடீர் காய்ச்சல் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

தமிழகம் முழுவதும் தற்போது டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் டெங்கு குறித்து கமல்ஹாசனே அரசுக்கு எதிரான தனது கருத்தை பதிவு செய்துள்ளார். இந்த நிலையில் கமலுக்கு டெங்கு காய்ச்சலா? அல்லது சாதாரண காய்ச்சலா? என்பது குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை

Leave a Reply