shadow

கமல்ஹாசனை சந்திக்க சென்னை வரும் டெல்லி முதல்வர்

உலக நாயகன் கமல்ஹாசன் வெகுவிரைவில் அரசியல் களத்தில் குதிப்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களை சந்தித்தார்.

இந்த சந்திப்பின் பரபரப்பு முடிவதற்குள் இன்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கமல்ஹாசனை சந்திப்பதற்காக சென்னை வருகிறார். இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

கமல்ஹாசன் ஆம் ஆத்மி கட்சியில் சேர வாய்ப்பு இருப்பதாகவும், அவர் ஆம் ஆத்மி தமிழக தலைவராக நியமனம் செய்யப்பட உள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.

பாஜக, காங்கிரஸ் என இரண்டு தேசிய கட்சிகளுக்கும் சிம்மசொப்பனமாக டெல்லியில் இருந்துவரும் ஆம் ஆத்மி கட்சிக்கு தமிழகத்தில் செல்வாக்கு இல்லாவிட்டாலும் கமல் அந்த கட்சியில் சேர்ந்தால் செல்வாக்கு பெற்று ஆட்சியை பிடிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply