கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்த டி.ராஜேந்தர்!

டி ராஜேந்தரின் இளையமகன் குறளரசன் திருமணம் இம்மாதம் நடைபெறவுள்ளதை அடுத்து அவர் கடந்த சில நாட்களாக திரையுலக பிரபலங்களுக்கு திருமண அழைப்பிதழை கொடுத்து வருகிறார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் அவர் சந்தித்த அடுத்த பிரபலம் கமல்ஹாசன். நேற்று கமல்ஹாசனை அவரது இல்லத்தில் தனது மகன் குறளரசனுடன் சந்தித்த டி.ராஜேந்தர், தனது மகனின் திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தார். கமல்ஹாசனும் கண்டிப்பாக திருமணத்தில் கலந்து கொள்வதாக கூறியுள்ளார்.

மேலும் நேற்று திமுக தலைவர் முக ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன், கனிமொழி எம்பி ஆகியோர்களிடமும் தனது அழைப்பிதழை டி.ராஜேந்தர் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply