கமல்ஹாசனின் அறுவை சிகிச்சை குறித்த முக்கிய தகவல்
நடிகரும் அரசியல் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கால் எலும்பு முறிவுக்கு சிகிச்சை பெற சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் என்பது தெரிந்ததே
இதனையடுத்து அவருக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சையின் போது அவரது காலில் வைக்கப்பட்ட பிளேட்டை எடுப்பதற்காகவே அவர் அப்பல்லோவில் இரண்டு நாட்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்தநிலையில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து பிளேட்டை எடுத்து முடித்து விட்டதால் நேற்று மாலை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். இந்த நிலையில் கமல்ஹாசனின் உடல்நலம் குறித்து அவரது கட்சியின் துணைத் தலைவர் டாக்டர் மகேந்திரன் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நமது தலைவர் கமலஹாசன் அவர்கள் அறுவை சிகிச்சை மூலமாக முடிந்து மருத்துவர்களின் ஆலோசனைக்கு ஏற்ப மருத்துவமனையில் இருந்து தமது இல்லம் திரும்புகிறார். மருத்துவமனை நிர்வாகத்திற்கும், சிறப்புடன் மருத்துவம் பார்த்த மருத்துவர்களுக்கும், உதவியாளர்களுக்கும், ஏனைய பணியாளர்களுக்கும், அத்துடன் நம்மவர் அவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று வாழ்த்திய நல் உள்ளங்களுக்கும் மக்கள் நீதி மையம் கட்சி சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்’
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது
Leave a Reply
You must be logged in to post a comment.