கமலுக்கு ஆதரவு இல்லை: மறைமுகமாக கூறிய ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாளை முதல் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ள நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கமல் ஆதரவு கேட்டது குறித்து ரஜினியிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதில் கூறிய ரஜினிகாந்த், ‘எனது அரசியல் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. இதற்கு மேல் இதுகுறித்து கேள்வி கேட்டு அவருக்கும் எனக்கும் உள்ள நட்பை கெடுத்து விடாதீர்கள்.

மேலும் பாஜக தேர்தல் அறிக்கை குறித்து கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ரஜினிகாந்த், ‘பாஜக தேர்தல் அறிக்கையை அனைவரும் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக நதிகள் இணைப்பு என்பது நல்ல விஷயம். நதிகளை இணைத்தாலே நாட்டில் பாதி வறுமை ஒழிந்துவிடும். இதுகுறித்து ஏற்கனவே, வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அவரை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளேன் என்று கூறியுள்ளார்.

ரஜினியின் ஆதரவு தனக்கு கிடைக்கும் என மிகவும் நம்பிக்கையுடன் கமல் இருந்த நிலையில் தற்போது ரஜினி தன்னுடைய ஆதரவு யாருக்கும் இல்லை என்று மீண்டும் ஒருமுறை கூறியுள்ளதால் கமல் தரப்பினர் அதிருப்தியில் உள்ளனர்.

Leave a Reply