shadow

‘கபாலி’யின் ஒட்டுமொத்த வசூலை 6 நாட்களில் முறியடித்த ‘2.0’

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘2.0’ திரைப்படம் கடந்த மாதம் 29ஆம் தேதி உலகம் முழுவதும் சுமார் 10 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகி நான்கே நாட்களில் ரூ.400 கோடி வசூல் செய்தது. அதேபோல் சென்னையில் ‘சர்கார்’ படம் வசூல் செய்த ஒட்டுமொத்த வசூலையும் ஆறே நாட்களில் முறியடித்தது.

இந்த நிலையில் நேற்று வரை சென்னையில் இந்த படம் ரூ.12.58 கோடி வசூல் செய்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ரஜினியின் ‘கபாலி’ திரைப்படம் தான் சென்னையில் இதுவரை அதிகபடமாக ரூ.12.35 கோடி வசூல் செய்தது என்பதும் இந்த படத்தின் ஒட்டுமொத்த வசூலை ‘2.0’ ஆறே நாட்களில் முறியடித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

‘2.0’ திரைப்படம் இன்னும் பெரும்பாலான திரையரங்குகளில் ஓடி வருவதால் சென்னையில் மட்டும் ரூ.15 கோடி வரை வசூல் செய்ய வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

 

Leave a Reply