கன்னியாகுமர் எம்பி வசந்தகுமார் நாங்குநேரியில் கைதா?

கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமாரை நாங்குநேரி காவல்நிலையம் அழைத்துச்சென்று போலீசார் விசாரணை செய்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெற்று வருவதால் அங்கு தங்கியிருக்கும் வெளியூர்க்காரர்கள் வெளியேற வேண்டும் என ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது

இந்த நிலையில் இடைத்தேர்தல் நடைபெற்று வரும் நாங்குநேரி தொகுதிக்குள் நுழைய முயன்றதாக கூறி வசந்தகுமாரிடம் போலீசார் விசாரணை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினரான எனக்கு சாலையில் செல்லக்கூட உரிமையில்லையா? என்றும், நாங்குநேரியில் பரப்புரையில் ஈடுபட்டால் என்னை கைது செய்யலாம் ஆனால் நான் என் வீட்டிற்குதான் செல்கிறேன் என்றும், ஒரு நாடாளுமன்ற உறுப்பினரான என்னை கைதி போல அழைத்து வந்தனர் என்றும் வசந்தகுமார் எம்பி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். ஆனால் இதுவரை வசந்தகுமார் எம்பி கைது செய்யப்படவில்லை என்றே கூறப்படுகிறது

Leave a Reply