கனிமொழி வெற்றி குறித்த வழக்கு: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தூத்து குடி தொகுதியில் கனிமொழி திமுக வேட்பாளராகவும், தமிழிசை செளந்திரராஜன் பாஜக வேட்பாளராகவும் போட்டியிட்டனர்

இந்த நிலையில் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி வெற்றியை எதிர்த்து தூத்துக்குடியை சேர்ந்த வசந்தகுமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் இந்திய தேர்தல் ஆணையமும் கனிமொழியும் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

முழுமையான விவரங்கள் இல்லாத கனிமொழியின் வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி ஏற்றது சட்டவிரோதம் என மனுவில் குற்றச்சாட்டு கூறியிருப்பதை அடுத்து இந்திய தேர்தல் ஆணையம், கனிமொழி ஆகியோர் 2 வாரங்களில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply