‘கனா’ தெலுங்கு ரீமேக் படத்தின் டைட்டில் அறிவிப்பு!

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ‘கனா’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர்ஹிட் ஆனது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இந்த படம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்த படத்திலும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளார். ‘கெளசல்யா கிருஷ்ணமூர்த்தி’ என்ற டைட்டில் இந்த படத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

பீமநேனி ஸ்ரீனிவாசராவ் இயக்கும் இந்த படத்தை கேஎஸ் ராமராவ் தயாரிக்கவுள்ளார். ஏற்கனவே விஜய் தேவரகொண்டாவின் அடுத்த தெலுங்கு படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வரும் நிலையில் இது அவருக்கு இரண்டாவது தெலுங்கு படம் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் இசையமைத்த திபுநிபுணன் தாமஸ் இந்த படத்திற்கும் இசையமைக்கவுள்ளார்.

 

Leave a Reply