shadow

கனமழை எதிரொலி: சென்னை பேருந்துகள் பழுதானதால் பயணிகள் அவதி

சென்னையில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருவதால் பெரும்பாலான சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இந்த மழைநீரில் செல்லும் பேருந்துகள் சில திடீரென பழுதாகி நடுவழியில் நிற்பதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அதுமட்டுமின்றி பழுதான பேருந்துகளால் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக பல பேருந்துகள் பழுதாகியுள்ளதால் அரசு பஸ்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது சென்னையில் 25 சதவீதம் அளவுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை என போக்குவரத்து அதிகாரிகளிடம் இருந்து தகவல் கிடைத்துள்ளது.

இதுகுறித்து டெப்போவில் உள்ள அதிகாரி ஒருவர் கூறியபோது, ‘மழை காரணமாக பழுதடைந்த பஸ்கள் பலவும் டெப்போவில் நிற்பது, டிரைவர், நடத்துநர்கள் உரிய நேரத்திற்கு டெப்போவுக்கு வந்து சேர முடியாதது, பள்ளி, கல்லூரிகள் விடுமுறை போன்ற காரணங்களால் பஸ்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மழை மற்றும் குறைவான பேருந்துகள் இயக்கப்படுவதால் ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

Leave a Reply