shadow

கண்ணே கலைமானே ‘ ரிலீஸ் தேதி அறிவிப்பு !

ஒரு கல் ஒரு கண்ணாடி , கெத்து , மனிதன் போன்ற ஹிட் படங்களில் நடித்த உதயநிதி ஸ்டாலின் தற்போது ‘கண்ணே கலைமானே ‘ என்னும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆக உள்ளது என ஏற்கனவே படக்குழு அறிவித்திருந்தது . தற்போது படத்தின் அதிகாரபூர்வமான ரிலீஸ் தேதி வெளிவந்துள்ளது.

‘ கண்ணே கலைமானே ‘ படம் வரும் பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக உதயநிதி ஸ்டாலின் அதிகாரபூர்வமாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் மற்றொரு படமான ‘ சைக்கோ ‘ இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .

சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் தமன்னா , வடிவுக்கரசி , வெற்றிகுமாரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் . மேலும் படத்தொகுப்பாளராக காசி விஸ்வநாதனும் ஒளிப்பதிவாளராக ஜலந்தர் வாசுவும் உள்ளனர்.

Leave a Reply