shadow

கடைசி நாளில் ஸ்பைடர்மேன் உடையணிந்து வங்கிக்கு சென்ற ஊழியர்

வங்கிப் பணியினை ராஜினாமா செய்த ஊழியர் ஒருவர் கடைசி நாளில் ஸ்பைடர் மேன் போன்று உடையணிந்துக் கொண்டு வங்கிக்கு சென்ற காட்சி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

வங்கியில் பணி செய்ய ஒவ்வொருவரும் ஆசைப்பட்டு வரும் நிலையில் வங்கிப் பணியினை ராஜினாமா செய்த ஊழியர் ஒருவர், கடைசி நாளில் ஸ்பைடர் மேன் போன்று உடையணிந்துக் கொண்டு வங்கிக்கு சென்று அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார். இப்படி ஒரு சம்பவம் பிரேசில் நாட்டில் நடந்துள்ளது.

பிரேசில் நாட்டில் உள்ள வங்கி ஒன்றில் வேலைபார்த்த ஊழியர் ஒருவர் தனது பணியை ராஜினாமா செய்துள்ளார். இதனையடுத்து கடைசி நாளில் பணிக்கு சென்ற அவர், அனைவரையும் உற்சாகப்படுத்தும் விதமாக ஸ்பைடர் மேன் போன்று உடையணிந்து சென்றுள்ளார்.

சூப்பர் ஹீரோ போன்று உடையணிந்து சென்ற அவரை சக ஊழியர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன வரவேற்றுள்னர். அவர்களுக்கு இனிப்புக் கொடுத்த அந்த ஊழியர், பின்னர் சக ஆண் ஊழியர்கள் சிலரை கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்தியுள்ளார். இதுதொடர்பான 51 விநாடிகள் அடங்கிய வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. இதனை சமூக வலைத்தளங்களில் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்

Leave a Reply